இந்தியாவில் 3 பத்ம விருதுகளை பெற்ற பார்சி இன பெண்ணும், சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடுகொண்டு திகழ்ந்தவருமான மேரி கிளப்வாலா குறித்து இன்றைய மகளிர் தினத்தில் காண்போம்.
இவர் 1908ஆம் ஆண்டு நீலகிரியில் பிறந்தவர். பார்சி இனத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ருஸ்ட்ரே பட்டேல்.தாய் ஆலமை. இவரது குடும்பம் சிறு வயதிலிருந்தே வசதியான குடும்பம். படிக்கும் காலத்திலேயே தொண்டுநிறுவனங்களிலும் இவர் ஈடுபட்டு வந்தார். தனது 18ஆவது வயதில் கிளப்வாலா என்ற பார்சியை திருமணம் செய்துகொண்டார்.
ராயபுரத்தில் வாழ்ந்து வந்த இத்தம்பதியினருக்கு 1930ஆம் ஆண்டு மகன் கஸ்ரோ பிறந்தார். மகனுக்கு 4 வயதுஆனபோதே கிளப்வாலா நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். ஆனாலும் துவண்டு விடாமல் இந்தசோகத்திலிருந்து மீள கில்ட் ஆஃப் சர்வீஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இணைந்து செயல்பட்டார்.
இளஞ்சிறார் குற்றவாளிகள் மீது பரிவு கொண்டிருந்த மேரி கிளப்வாலாவின் வற்புறுத்தலால் இளஞ்சிறார் குற்றவாளிகளுக்கான வழிகாட்டுத் துறை புதிதாக உருவாக்கப்பட்டது. அந்த சூழலில்தான் 1942ஆம் ஆண்டில்2ஆம் உலகப் போர் உருவானது. இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில் விருந்தோம்பல் குழுவை ஏற்படுத்தினார். ராணுவ வீரர்களுக்கு, உணவுகள் மருந்துகளை வழங்கினார். அவர்களின் குடும்பத்துக்கும் நிதிதிரட்டி வழங்கினார். இவரது பணியைப் பாராட்டி அப்போதைய ஜெனரல் கரியப்பா கேரி கிளப்வாலாவை இந்திய ராணுவத்தின் டார்லிங் என பாராட்டினார்.
அடையாறு சேவா சமாஜம் பள்ளி, மனநலம் குன்றிய மாணவர்களுக்கான பால விஹார், காது கேளாதோர்பள்ளி, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் வொர்க் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களை துவங்க பங்களிப்பாற்றினார். 1956ஆம் ஆண்டில் மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் ஷெரிஃபாக நியமிக்கப்பட்டார்.
தீடிரென எதிர்பாராவிதமாக 1974ஆம் ஆண்டில் மேரியின் மகன் இறந்துவிட்டார். அப்போதும் துவண்டுவிடாமல் மகன் இறந்த ஒரு வருடத்துக்குள் தன் கையிலிருந்த பணத்தை வைத்து பார்சி அஞ்சுமன் பாஹ்கட்டடத்தை கட்டினார். ஆனால் அந்த கட்டடத்தை கட்டி, அதனைத் திறப்பதற்கு முன்பே, 1975ஆம் ஆண்டுபிப்ரவரி 6ஆம் தேதி அவர் இறந்துவிட்டார். இவருக்கு 1955ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருதும், 1968ஆம் ஆண்டில்பத்ம பூஷன் விருதும், 1975ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்தியாவில்இந்த 3 உயரிய விருதுகளையும் பெற்ற ஒரே பெண் மேரி கிளப்வாலா மட்டும்தான்.�,”