இந்திய நகரங்களில் பயணத்துக்கு ஏற்ற நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை, தற்போது பாதுகாப்பான நகரங்களின் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் தேசியக் குற்றவியல் ஆவணப் பிரிவு ஒவ்வொரு மாநிலத்திலும், நகரத்திலும் நடந்த குற்றங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் மாநிலத் தலைநகரங்களில் வாழும் மக்களின் பாதுகாப்பு குறித்து தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது. அதன்படி சென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் வாழும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், இந்தியாவின் மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னையில் ஆண் -பெண் ஆகியோருக்கு அதிகளவு பாதுகாப்பு உள்ளது தெரியவந்துள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்கள் இரவு 9 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை என்றால் டெல்லியைச் சேர்ந்தவர்கள் 87%, பெங்களூரில் 55%, மும்பையில் 48% மற்றும் சென்னையில் 30% பதற்றம் அடைவதாகத் தெரிவித்துள்ளனர்.�,