tஅழகிரியை வரவேற்ற திமுக நிர்வாகி சஸ்பென்ட்!

Published On:

| By Balaji

மு.க. அழகிரியை நேற்று சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

திமுக தலைவர் கலைஞரின் மறைவுக்குப் பிறகு மீண்டும் கட்சியில் இணைவதற்கான முயற்சியை அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி மேற்கொண்டு வருகிறார். எனினும் அவரைக் கட்சியில் சேர்க்க முடியாது என்ற முடிவில் திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். இதற்கிடையே நாளை (செப்டம்பர் 5) கலைஞர் நினைவிடம் நோக்கிப் பேரணி செல்லவுள்ளதாகவும், இதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் அழகிரி தெரிவித்தார்.

பேரணி தொடர்பாகத் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுவந்த அவர், நேற்று (செப்டம்பர் 3) விமானம் மூலம் சென்னை வந்தார். திமுக தலைவர் ஸ்டாலினைத் தான் பார்க்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், சென்னை வந்த அழகிரியை விமான நிலையத்தில் வரவேற்றதற்காக திமுகவிலிருந்து அக்கட்சியின் நிர்வாகி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அக்கட்சியின் பொது செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வேளச்சேரி கிழக்குப் பகுதிச் செயலாளர் மு.ரவி கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சஸ்பென்ட் செய்யப்படுகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share