1
இந்த ஆண்டில் இந்தியாவின் பருத்தி உற்பத்தி 373 லட்சம் மூட்டைகளாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் பருத்தி விதைப்புப் பரப்பு மற்றும் பருத்தி விதை விற்பனை அதிகமாக இருந்ததாலும், பிங்க் போல்வார்ம் பூச்சித் தாக்குதல் குறைவாக இருந்ததாலும் பருத்தி உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்று இந்திய பருத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 2018-19 பருவத்தில் மொத்தம் 373 லட்சம் மூட்டைகள் அளவுக்குப் பருத்தி உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மூட்டை ஒன்றுக்கு 170 கிலோ பருத்தி இருக்கும். பருத்தி உற்பத்தி 373 லட்சம் மூட்டைகளுடன் இறக்குமதி செய்யப்படும் 18 லட்சம் மூட்டைகளையும் சேர்த்து இந்த ஆண்டில் மொத்தம் 434 லட்சம் மூட்டைகள் விநியோகத்துக்குத் தயாராக இருக்கும் என்று இந்திய பருத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பருத்திக்கான தேவையைப் பொறுத்தவரையில், பருத்தி ஆலைகள் மற்றும் இதர நுகர்வுக்கு 320 லட்சம் மூட்டைகளும், கச்சா பருத்தி ஏற்றுமதிக்கு 60 லட்சம் மூட்டைகளும் தேவைப்படுகிறது. எஞ்சிய 54 லட்சம் மூட்டைகள் அடுத்த பருவத்துக்கு இருப்பில் இருக்கும். நடப்பு பருவத்தில் பருத்தி இருப்பில் நெருக்கடி ஏற்படும் என்று சமீபத்தில் சில வதந்திகள் பரவின. இதனால் ஜவுளி ஆலைகள் அச்சமுற்றன. மேலும், பருத்தி விலை உயருமா என்று அச்சத்திற்கு வர்த்தகர்கள் ஆளாகினர். இந்த வதந்திகளை மறுத்த பருத்தி கூட்டமைப்பு பருத்தி இருப்பு போதுமான அளவில் இருக்கும் விளக்கமளித்திருந்தது.�,