எல்லா வருடங்களையும் போலவே இந்த வருடமும் ‘தீபாவளிக்குப் புதுசா என்ன பலகாரம் செய்யலாம்?’ என்ற கேள்வி பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். ‘புதுசா மட்டுமல்ல, செய்யறதுக்கு சிம்பிளாவும் இருந்தா நல்லாருக்கும்’ என்பது இன்னும் சிலரின் எதிர்பார்ப்பு. அதற்கு இந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு போளி சூப்பர் சாய்ஸ்.
**என்ன தேவை?**
பூரணம் செய்ய…
வேகவைத்து உதிர்த்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு – 2 கப்
வெல்லத்துருவல் – ஒரு கப்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
நெய் – தேவையான அளவு
பொட்டுக்கடலை மாவு (தேவையானால்) – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
மேல் மாவுக்கு…
சிரோட்டி ரவை அல்லது மைதா – ஒன்றரை கப்
உப்பு – 2 சிட்டிகை
நெய் – ஒரு டீஸ்பூன்
**எப்படிச் செய்வது?**
கிழங்குடன் நெய், எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் சேர்த்து அரைக்கவும். அந்தக் கலவையை கடாயில் சேர்த்து எண்ணெய், நெய் எதுவும் சேர்க்காமல் அடுப்பில்வைத்து ஒரு நிமிடத்துக்குக் கிளறினால் பூரணம் ரெடி. கலவை கையில் பிசுபிசுப்பாக ஒட்டுகிற மாதிரி தெரிந்தால் அதில் ஒன்றரை டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம். உருண்டை பிடிக்கும்போது கையில் ஒட்டாமலிருக்க கையில் சிறிது நெய் தடவிக்கொள்ளலாம். சிரோட்டி ரவை அல்லது மைதா மாவுடன் உப்பு, நெய் கலந்து பிசறிவிடவும். அத்துடன் தேவையான அளவு தண்ணீர்விட்டுப் பிசைந்து மூடி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து மறுபடியும் நன்கு அடித்துப் பிசையவும். மீண்டும் எண்ணெய் சேர்த்து நன்கு உறிஞ்சப்படும் வரை பிசையவும். உருண்டைகளாக உருட்டி மெலிதாக்கி, பூரணம் வைத்து மெலிதாக போளிகளாகத் திரட்டவும். சூடான தோசைக் கல்லில் நெய்விட்டு சுடவும்.
**[நேற்றைய ரெசிப்பி: சர்க்கரைக்கு பதில் தேன்… சரியா?](https://minnambalam.com/public/2021/10/24/1/using-honey-instead-of-sugar)**
.�,