இதயங்களைக் கனக்க வைத்த சுர்ஜித்தின் நடன வீடியோ !

Published On:

| By Balaji

கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) மாலை 5:40 மணியளவில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆரோக்கியராஜ் – கலாமேரி தம்பதியரின் மகனான இரண்டு வயது சிறுவன் சுர்ஜித் வில்சன் அவரது வீட்டின் அருகே அமைந்திருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

ஆழ்துளைக் கிணற்றின் 26 அடி ஆழத்தில் விழுந்த அவர் மீட்புப் பணிகளுக்கு இடையே 88 அடி ஆழத்திற்கும் கீழே சென்றுவிட்டார். அவரை மீட்க தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

சுர்ஜித் நலமாக மீண்டு வர வேண்டும் என்று தமிழகமே பிரார்த்தனையில் மூழ்கி இருக்கிறது. ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் சேவ்சுர்ஜித் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. இந்த நிலையில் சிறுவன் சுர்ஜித் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

முகம் எங்கும் புன்னகையுடன் உற்சாகமாய் சுர்ஜித் நடனம் ஆடும் வீடியோ அவரின் வருகைக்காக காத்திருக்கும் அனைவரின் நெஞ்சையும் கனக்க வைக்கிறது. எப்படியாவது அவரை மீட்டுவிட மாட்டார்களா என்று ஏக்கமுடன் பலரும் அந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share