gகிச்சன் கீர்த்தனா: சுரைக்காய் குழம்பு

Published On:

| By Balaji

வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. வெளியில் தலைகாட்டினாலே உடல் வியர்வையால் நனைந்து விடுகிறது. இந்தக் கோடையை எப்படிச் சமாளிப்பது என்பது பலரின் கேள்வியாகத் தொடர்கிறது. ‘எளிய உணவுகளைச் சாப்பிடுவதன்மூலம் கோடையின் வெப்பத்தை எளிதாகச் சமாளிக்கலாம்’ என்பதே இதற்கான சரியான பதில். அதற்கு இந்தச் சுரைக்காய் குழம்பு உதவும்.

**என்ன தேவை?**

சுரைக்காய் – கால் கிலோ

மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

சின்ன வெங்காயம் – 10

பூண்டு – 4 பல்

சீரகம் – ஒரு சிட்டிகை

புளி – ஒரு எலுமிச்சை அளவு

சிறிய தக்காளி – ஒன்று

நல்லெண்ணெய் – 200 கிராம்

வெந்தயம் – ஒரு சிட்டிகை

கடுகு – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

சுரைக்காயைத் சிறிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் வறுக்கவும். வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், பூண்டு, சீரகம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். நல்லெண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்துக் கிளறி, அரைத்த விழுதைப் போட்டு வதக்கவும். பின்பு சுரைக்காயை அதில் சேர்க்கவும். பின்பு ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு வேகவைக்கவும். காய் வெந்தபின் புளிக்கரைசலைச் சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து இறக்கவும்.

**[நேற்றைய சண்டே ஸ்பெஷல்: எளிய உணவுகளுக்கு மாறுங்கள்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2021/04/18/1/changing-to-simple-foods)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share