wமிக நெருக்கமாக எடுக்கப்பட்ட சூரியனின் படம்!

Published On:

| By Balaji

சூரியனை இதுவரை இல்லாத அளவு நெருக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

சூரியனிலிருந்து 15 கோடியே 2 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பூமி. கிட்டத்தட்ட இதன் பாதியளவு தொலைவில் 7 கோடியே 70 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் நாசா இணைந்து அனுப்பிய சோலார் ஆர்பிட்டர் இந்தப் புகைப்படங்களை எடுத்துள்ளது.

“இந்த அற்புதமான படங்கள் விஞ்ஞானிகள் சூரியனின் வளிமண்டல அடுக்குகளை ஒன்றிணைக்க உதவும். இது பூமிக்கு அருகில் மற்றும் சூரிய குடும்பம் முழுவதும் விண்வெளி வானிலை எவ்வாறு இயக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு உதவும்” என்று நாசா திட்ட விஞ்ஞானி ஹோலி கில்பர்ட் கூறியுள்ளார்.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share