Hரிலாக்ஸ் டைம் : சுக்கு காபி!

Published On:

| By Balaji

கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் பரவி, மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிக் கிடக்கும் சூழலில், ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்கிற நம் மூத்தோர் மொழி நினைவிலாடுகிறது. இன்று விதவிதமான பானங்கள் சந்தைக்கு வந்துவிட்டாலும் சுக்கு காபிக்கு நிகர் வேறில்லை. இன்றைய ரிலாக்ஸ் டைமில் இதை செய்து அருந்துங்கள். உண்மையை உணர்வீர்கள்.

**எப்படிச் செய்வது?**

ஒரு டீஸ்பூன் மல்லியை (தனியா) லேசாக வறுத்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு சிறிய துண்டு சுக்கு, ஏலக்காய் ஒன்று, மிளகு இரண்டு ஆகியவற்றைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் சிறிய பாத்திரமொன்றில் ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு சூடாக்கவும். சூடானதும் அரைத்த பொடியில் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டிப் பருகவும்.

**சிறப்பு**

சுக்கு காபி பருகினால், சுவாச உறுப்புகள் சுத்திகரிக்கப்பட்டு கடுஞ்சளியும் குணமடையும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share