gத்ரிஷா ரசிகர்களுக்குத் தீபாவளி பரிசு!

Published On:

| By Balaji

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று (அக்டோபர் 27) த்ரிஷா நடிப்பில் வெளிவர இருக்கும் ராங்கி படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இரண்டு மூன்று வருடங்கள் நீடித்திருப்பதே கடினமாக இருக்கும் சூழலில் 16 ஆண்டுகளாகத் தன்னுடைய இடத்தைத் தக்கவைத்து இன்றும் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை த்ரிஷா கொண்டுள்ளார். கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை அவர் தொடர்ந்து தேர்வு செய்து நடித்துவரும் அவரது 96 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ராங்கி. இந்தத் திரைப்படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார். அந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாவது போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் தற்போது தீபாவளியை முன்னிட்டு மூன்றாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

த்ரிஷா நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘கர்ஜனை’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி காத்திருக்கின்றன. மேலும் ‘1818’, ‘பரமபதம்’ ஆகிய படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share