மொபைல் போன் வெளிச்சத்தில் தேர்வு: சர்ச்சையில் கேரளக் கல்லூரி!

Published On:

| By admin

ேரளத்தில் கல்லூரி ஒன்றில் மொபைல் போன் வெளிச்சத்தில் மாணவர்கள் தேர்வு எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரளத்தில் எர்ணாகுளம் நகரில் புகழ்பெற்ற மகாராஜாஸ் கல்லூரி அமைந்துள்ளது. இதில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவ மாணவிகள் நேற்று (ஏப்ரல் 12) பருவத் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது கன மழையை முன்னிட்டு மின் வினியோகம் தடைப்பட்டு கல்லூரியின் பல அறைகள் இருளில் மூழ்கி உள்ளன. இதனால் மாணவர்கள் திகைத்துப் போனார்கள். இதன்பின் மொபைல் போன் வெளிச்சத்தில் தேர்வு எழுத மாணவர்களுக்குத் தேர்வு கண்காணிப்பாளர்கள் அனுமதி அளித்துள்ளனர்.
தேர்வு அறைக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல கூடாது என்ற விதியைப் பற்றி கவலைப்படாமல் 2 மணி நேரம் ஒரு கையில் போனை பிடித்துக்கொண்டு மறுபுறம் தேர்வெழுதி உள்ளனர். அது ஒரு சுயாட்சி கல்லூரி என்ற வகையில், அதிகாரிகள் தேர்வை ரத்து செய்திருக்கலாம். மாணவர்களை மறுதேர்வை எழுதும்படி கூறியிருக்கலாம்.
ரூ.77 லட்சம் செலவில் வாங்கிய ஜெனரேட்டர் பயன்பாடு என்ன ஆயிற்று என்றும் மாணவர்களால் கேட்கப்பட்டுள்ளது. இதுபற்றி கல்லூரி முதல்வர் அனில் கூறும்போது, தேர்வு சூப்பிரண்டிடம் இருந்து விளக்கம் கேட்டுப் பெற்றுள்ளோம். இதுகுறித்து நாளை தேர்வு நிலை குழு ஆய்வு மேற்கொள்ளும் என கூறியுள்ளார்.
கல்லூரிக்காக 54 லட்சம் ரூபாய், உயர் அழுத்த மின்சார லைன் பெற செலவிடப்பட்டுள்ளது. ஆனால், அதைப் பயன்படுத்துவதற்கு பதிலாக இப்படி நடந்துள்ளது. ஜெனரேட்டர் போன்ற மாற்று வசதிகளை முன்பே ஏற்பாடு செய்யப்படவில்லை. என்னவானாலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பது உண்மைதான். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் நகைப்புடையதாக உள்ளது.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share