ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை விவகாரத்தில் பக்தர்கள் வேண்டுதலே மகேஷன் தீர்ப்பாகிப்போனது.
பல போராட்டங்களை சந்தித்த
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா
யானைகள் புத்துணர்வு முகாம்சென்று ஆண்டாள் கோயிலுக்கு வியாழக்கிழமை திரும்பியது. கோயில் பட்டர்கள், பக்தர்களின் உற்சாகமான வரவேற்புடன் கோயிலுக்கு வந்த யானை தன் வழக்கமான பணிகளை துவக்கியது புதிய பாகன்களின் வழிகாட்டுதலோடு.
இந்த யானையை பராமரிக்க திருச்செந்துார் கோயில் பாகன்கள் இருவர் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு 2011ல் அசாமில் இருந்து யானை ஜெயமால்யதா கொண்டுவரபட்டது. கேரளாவை சேர்ந்த பாகன் ராஜா பராமரித்து வந்தார். மேட்டுபாளையத்தில் நடந்த யானைகள் புத்துணர்வு முகாமிற்கு பிப்.6 அன்று அழைத்து செல்லபட்டது. இதனிடையே யானையை பாகன் ,உதவியாளர் கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலை தளங்களில் பரவியதையடுத்து இருவரையம் கோயில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. கோவை வனத்துறை இருவரையும் கைது செய்தது.
பாகன் உதவியாளர் சிறையிலடைக்கபட்ட நாள் முதல் யானை ஜெயமால்யதா, புத்துணர்வு முகாமில் ஒருவித பரிதவிப்புடன் காணப்பட்டது. இதனையறிந்த அறநிலையத்துறை, வனத்துறையினர் யானையை மீண்டும் ஆண்டாள் கோயிலுக்கே அனுப்ப முடிவு செய்தனர். பாகனின் கட்டளைக்கே யானை கட்டுபட்டதால் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு கொண்டு வருவதில் சிக்கல் இருந்தது. இந்நிலையில் சிறையிலிருந்த பாகனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கபட்டு அவரது பாதுகாப்பு , பராமரிப்பிலே ஸ்ரீவில்லிபுத்துார் அழைத்து வரப்பட்டது. தெற்குரதவீதி விடயத்து மண்டபத்திற்கு வந்தடைந்த யானையைகோயில் தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், பட்டர் சுதர்சன், ஸ்தானிகம் ரமேஷ் வரவேற்று பழங்களை கொடுத்தனர். ஜெயமால்யதாவை பராமரிக்க திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலை சேர்ந்த பாகன்கள் சுப்பிரமணி, திருப்பதி நியமிக்கபட்டுள்ளனர்.
நேற்று( மார்ச் 5) பக்தர்கள் மிக அதிகளவில் கோயிலுக்கு வந்து யானையை பார்த்து சென்றது யானை மீது வைத்திருந்த பாசத்தை உணர்ச்சி பொங்க வெளிப்படுத்தியது.
**_சக்தி பரமசிவன்**
�,