sரிலாக்ஸ் டைம்: ஸ்பிரிங் ஆனியன் வித் பாஸ்தா!

Published On:

| By Balaji

L

குழந்தைகள் அதிகம் விரும்பும் உணவாக இருக்கும் பாஸ்தாவில் அனைவரும் விரும்பும் இந்த ஸ்பிரிங் ஆனியன் வித் பாஸ்தா செய்துகொடுத்து ரிலாக்ஸ் டைமை இனிமையாக்கலாம்.

**எப்படிச் செய்வது?**

கால் கப் பொடியாக நறுக்கிய விருப்பமான காய்கறிகளை நீரில் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். அரை கப் பாஸ்தாவைக் கொதிக்கும் நீரில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிட்டு எடுத்து, குளிர்ந்த நீரில் அலசி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயத்தாள் கால் கப், நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று சேர்த்து வதக்கி, ஒரு டீஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது போட்டு மேலும் வதக்கவும். இதனுடன் வெந்த பாஸ்தா, காய்கறிகள் சேர்த்துக் கிளறி ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி சாஸ், ஒரு டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து, இரண்டு டேபிள்ஸ்பூன் சீஸ் துருவல், சிறிதளவு கொத்தமல்லித்தழை போட்டுக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

**சிறப்பு**

பாஸ்தாவில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. இரண்டு வயது முதல் 70 வயதினர் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். எளிதில் செரிமானம் ஆகிவிடும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share