eபயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாக்!

Published On:

| By Balaji

இந்திய பயணிகள் விமானத்தை போர் விமானம் என நினைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் சுற்றி வளைத்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

120 பயணிகளுடன் ஒரு ஸ்பைஸ்ஜெட் விமானம், கடந்த மாதம் பாகிஸ்தான் வான்வெளியில் நுழைந்தபோது, பாகிஸ்தான் விமானப்படை போர் விமானங்கள் எவ்வாறு தடுத்தது என்பது குறித்த விவரங்கள் இப்போது வெளிவருகின்றன.

டெல்லியில் இருந்து ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் சென்று வருகிறது. கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதியும் வழக்கம் போல இந்த விமானம் 120 பயணிகளுடன் புதுதில்லியில் இருந்து காபூலுக்கு புறப்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததும், இரண்டு எஃப்-16 ரக பாகிஸ்தான் போர் விமானங்கள் அதை நடுவானில் மறித்தன.

தாழ்வாகப் பறக்கும்படியும், விவரங்களை அவர்களிடம் தெரிவிக்கும்படியும் ஸ்பைஸ்ஜெட் பைலட்டிடம் பாகிஸ்தான் விமானிகள் வலியுறுத்தியுள்ளனர். விமானங்கள் இடைமறித்ததும், ஸ்பைஸ்ஜெட் விமானி, பாகிஸ்தான் எஃப் -16 ஜெட் விமானிகளுக்கு விளக்கமளித்துள்ளார். இது ஸ்பைஸ்ஜெட், இந்திய பயணிகள் விமானம், இது பயணிகளை ஏற்றிச் செல்கிறது. ஷெட்யூல்படி காபூலுக்கு செல்கிறது” என்று விமானி அப்போது விளக்கம் அளித்துள்ளார்.

இத்தகவலை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் போர் விமானங்கள், ஆப்கானிஸ்தானின் எல்லை வரை, இந்திய விமானத்திற்கு பாதுகாப்பாக சென்றன. சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் இத்தகவலை தற்போது வெளியிட்டிருக்கிறது. மேலும், விமானத்தை அடையாளம் காண நியமிக்கப்பட்ட “கால்-சைன்”(call-sign) குறித்து குழப்பம் ஏற்பட்டதால், பாகிஸ்தான் விமானங்கள் இந்த இடைமறிப்பை செய்திருக்கின்றன என சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் கூறியுள்ளது.

ஒவ்வொரு விமானத்திற்கும் ஒரு குறியீடு உள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமானம் ‘எஸ்.ஜி’ என்ற குறியீட்டால், அழைக்கப்படுகிறது. இது பாகிஸ்தான் விமானப்படைக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் குறியீடு ‘ஐ.ஏ’ என்று தவறாகப் புரிந்துகொண்டு, பாகிஸ்தான் விமானப்படை இவ்வாறு இடைமறித்துள்ளது. இந்திய ராணுவம் அல்லது இந்திய விமானப்படை என்பதுதான் ஐ.ஏ குறியீட்டின் அர்த்தமாகும்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share