`
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீண்டு வரவேண்டும் என்று தேசமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னணி பாடகரான எஸ்பிபி 16 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். அவரது குரலுக்கு தமிழகம், ஆந்திரா, கேரளா என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர், விரைவில் குணமடைய வேண்டும் என்று நேற்று மாலை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரார்த்தனைகள் நடந்தன.
சபரிமலை ஐயப்பன் கோயிலிலும் பிரார்த்தனை நடைபெற்றது. இவ்வாறு அவர் மீண்டு வர வேண்டும் என்று பல தரப்பினரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது என்று எம்ஜிஎம் மருத்துவமனை இன்று மாலை அறிக்கை வெளியிட்டுள்ளது.
எஸ்பிபி தொடர்ந்து வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. பலதரப்பட்ட மருத்துவ வல்லுநர்கள் குழு அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருகிறது.
எஸ்பிபியின் உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**கவிபிரியா**
�,”