உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தான் கஞ்சி வகைகள் சிறந்தது என்கிற பொதுவான கருத்து உண்டு. உண்மையில் கஞ்சியில் உள்ள சத்துகள் உடலை கவசம் போல் காக்கும் தன்மையுடையவை. அதற்கு மிகச் சிறந்த உதாரணம், இந்தச் சோளக் கஞ்சி.
**எப்படிச் செய்வது?**
ஒரு கப் நாட்டு வெள்ளைச்சோளத்தை ஐந்து மணி நேரம் ஊறவைத்து, நன்கு அரைத்து லேசாகப் புளிக்கவிட்டு எடுத்தால்,கஞ்சி தயாரிப்பதற்குத் தேவையான மாவு தயார். ஒரு கப் மாவுக்கு ஏழு முதல் எட்டு கப் தண்ணீர்விட்டு, கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு வேகும் வரை காய்ச்சி, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது ஆறியதும் அதில் 200 மில்லி மோர் கலந்து குடிக்கலாம். இதற்குத் துணையாக வல்லாரைத் துவையல் தொட்டுக்கொள்ளலாம்.
**சிறப்பு**
இதில் நார்ச்சத்து அதிகம். இது நீரிழிவைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். எலும்புகளை வலுப்படுத்தும்.
�,