tமெதுவாக நடப்பது வேகமாக வயதாவதன் அறிகுறியா?

public

மெதுவாக நடப்பது வேகமாக வயதாவதன் அடையாளமாக இருக்கலாம் என 40 ஆண்டுகால நீண்ட ஆய்வு முடிவொன்று தெரிவிக்கின்றது.

40 வயதை நெருங்குபவரா நீங்கள்? ஆம், என்றால் இதோ உங்களுக்காக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவை சற்றுப் படித்துப் பாருங்கள். நீங்கள் மெதுவாக நடப்பவராக இருந்தால், அது நிதானமாக உலா வருவதை மட்டும் குறிக்கவில்லை. உடல் ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றலில் குறிப்பிடத்தக்க குறைபாடுகளின் அறிகுறியாகக் கூட இது இருக்கலாம். மனம் போன போக்கில், பொறுமையாக நடப்பதெல்லாம் சிக்கலா? என நீங்கள் கேள்வி கேட்பது புரிகிறது. மேலே, படியுங்கள்..

1970களில் இருந்து தொடங்கிய ஒரு நீண்டகால ஆய்வின் புதிய கண்டுபிடிப்புகள், 40 வயதை நெருங்குபவர்கள் தங்களின் இயல்பான வேகத்தை விட மிக மெதுவாக நடப்பது, அவர்களுக்கு வயதாகிறது என்பதற்கும், சமரசம் செய்யப்பட்ட மூளை அதன் ஒருமைப்பாட்டின் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது என்பதற்கும் ஓர் அறிகுறியாக இருக்கலாம் என்பதைக் கண்டறிந்துள்ளது. 1000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை, நீண்ட காலமாக கவனித்து வரும் இந்த ஆய்வுக் குழுவினர், சமீபத்தில் மனிதனின் நடை வேகத்துக்கும் ஆரோக்கியத்துக்குமான(உடல், மனம்) நெருக்கமான தொடர்பை கண்டறிந்துள்ளனர்.

லண்டன் கிங்ஸ் கல்லூரி மற்றும் அமெரிக்காவிலுள்ள டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவர் நடக்கும் வேகத்தை வைத்தே அவரது உடலில் உள்ள முக்கியமான நோய்களை மருத்துவத்தால் கண்டறியமுடியும் எனக் கூறுகின்றனர். மெதுவாக நடப்பவர்களின் உடல்களும் மூளைகளும் வேகமாக நடப்பவர்களுடன் ஒப்பிடும்போது, 40-45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கூட அவர்களின் வயதை விட அதிக வயதைக் காட்டுகின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு, 3 வயது குழந்தைகளாக இருந்த 1,000 பங்கேற்பாளர்களை கொண்ட ஒரு நீண்ட கால சுகாதார ஆய்வு இது. இந்த ஆய்வுக்குட்பட்டவர்கள் பள்ளிகளில் படிப்பதில் இருந்து 45 வயதுக்கு உட்பட்ட காலத்தை உள்ளடக்கியது. மேலும், மெதுவான நடை என்பது முதுமைக்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே கிடைக்கும் ஒரு சிக்கல் அறிகுறியாகும் என்று கண்டறியப்பட்டது. ஒரு மனிதனின் நடைவேகம் அவரது நுரையீரல் செயல்பாடு, கண் பார்வை மற்றும் தசை வலிமை ஆகியவற்றின் வெளிப்படையான குறிகாட்டியாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆராய்ச்சி, நடையோடு மட்டும் நிற்காமல், குழந்தைப் பருவத்திலிருந்து சமூகத்தில் வளரும் ஒரு மனிதன் சந்திக்கும் அனுபவங்களும், சிக்கல்களும், வெளிப்பாடுகளும் அவனது உடல், மன ஆரோக்கியத்தை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன என பல்வேறு தளங்களிலும் விரிவடைகின்றது.

மருத்துவ ஆராய்ச்சியாளர் ஸ்டீபனி ஸ்டூடென்ஸ்கி, “மூன்று வயதாக இருக்கும் ஒரு குழந்தையின் அறிவாற்றல் பரிசோதனையின் போது கிடைக்கும் மோசமான முடிவுகள், வாழ்நாள் முழுவதும் அவர்களை பாதிக்கக்கூடும் என்று நாம் கருதக்கூடாது” என்று கூறியிருக்கிறார். மேலும், மனித மூளை மாறும் தன்மையுடையது; இது ஒருவருக்கு கிடைக்கும் எக்ஸ்போஷர், அனுபவங்களின்படி தொடர்ந்து தன்னை மறுசீரமைத்து வருகிறது” எனக் கூறுகிறார் ஸ்டூடென்ஸ்கி.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0