சிவசங்கர் பாபா: இரண்டாவது வழக்கில் 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

public

1

ஏற்கனவே ஒரு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு, இரண்டாவது போக்சோ வழக்கில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது போக்சோ நீதிமன்றம்.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கடந்த மாதம் டெல்லியில் வைத்து கைது செய்தனர். பின்னர், சிறையில் அடைக்கப்பட்டார். இதுவரை 18 மாணவிகள் அவர் மீது புகார் அளித்துள்ளனர். அதன்படி சிவசங்கர் பாபா மீது மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இரண்டு வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது வழக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது.

சிவசங்கர் பாபா மீதான இரண்டாவது வழக்கில் பள்ளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்வதாக கூறி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல் வழக்கில் சிறையில் உள்ள சிவசங்கர் பாபா, இன்று(ஜூலை) இரண்டாவது போக்சோ வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் சிவசங்கர் பாபாவுக்கு வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.