ஜாமீனுக்காக போராடும் சிவசங்கர் பாபா: தொடர்ந்து மறுக்கும் நீதிமன்றம்!

public

r

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, அப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, மூன்று போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மூன்று வழக்குகளிலும் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சிவசங்கர் பாபா, இந்த வழக்கிலிருந்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவற்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதுமட்டுமில்லாமல், சிறையில் கூடுதல் வசதிகள் கொண்ட முதல் வகுப்பு அறையை ஒதுக்க வேண்டும் என்ற மனுவையும் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கீழமை நீதிமன்றங்களைத் தொடர்ந்து, இரு வழக்குகளில் ஜாமீன் வழங்கக் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் கடந்தமுறை விசாரணையின்போது சிபிசிஐடி போலீஸார் சிவசங்கர் பாபா உள்பட நான்கு பேர் மீது 40 சாட்சியங்களின் அடிப்படையில் 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இன்று(ஆகஸ்ட் 17) இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *