_நிசப்தம்: ஷாலினியின் சீரியஸ் முகம்!

Published On:

| By Balaji

மாதவன், அனுஷ்கா நடிக்கும் ‘நிசப்தம்’ படத்தில் ஷாலினி பாண்டேவின் ‘கேரக்டர் போஸ்டர்’ வெளியாகியுள்ளது.

ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக நடித்துள்ள படம் நிசப்தம். இப்படத்தில் மாதவன் நாயகனாக நடித்துள்ளார். இசைக் கலைஞனாக இம்முறை பாத்திரம் ஏற்றுள்ளார் மாதவன். ரெண்டு திரைப்படத்திற்குப் பின் மாதவன்-அனுஷ்கா 13 ஆண்டுகளுக்கு பின் இணையும் படமிது.

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படத்தில், முன்னணி நடிகர்கள் பலர் கதையில் முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளனர். புலனாய்வுத் துறை அதிகாரியாக அஞ்சலி, வில்லனாக ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன், அர்ஜூன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தின் போஸ்டரையும் சமீப நாட்களாக வெளியிட்டு வருகிறது படக்குழு.

சமீபத்தில், இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள மைக்கேல் மேட்சன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, இன்று மாலை ஷாலினி பாண்டே போஸ்டரை வெளியிட்டது படக்குழு.

அர்ஜூன் ரெட்டி படத்திற்குப் பின் ஜாலியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த ஷாலினி இப்படத்தில் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சோனாலி என்ற பாத்திரத்தில் நடிக்கும் ஷாலினி, வாய் பேச முடியாத அனுஷ்காவின் குரலாக இக்கதையில் தோன்றவுள்ளார். நவம்பர் 6ஆம் தேதி வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்திருக்கிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share