.
தமிழகத்தில் கொரோனாவால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல சீரியல்கள் நிறுத்தப்பட்டன. ஊரடங்கால் ஷூட்டிங் நடத்த முடியாமல் பல சீரியர்கள் நிறுத்தப்பட்டு, அதற்கு பதில் பழைய சீரியல்களை சேனல்கள் ஒளிபரப்பி வந்தன. இந்நிலையில் மே மாதம் 30-ம் தேதி முதல் 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம் என்று அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்படி சில சீரியல் படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில் ஜூன் 19 ஆம் தேதி முதல் சென்னைக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜூலை 5 ஆம் தேதி தொடர்ந்த இந்த ஊரடங்கால் மீண்டும் ஷூட்டிங் முடங்கியது.
சீரியல்கள் பொதுவாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில்தான் அதிகம் நடைபெறுகின்றன. இந்த மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையானதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பின் ஜூலை 6 முதல் சீரியல் படப்பிடிப்புகள் தொடங்கின. அதன் விளைவாக ஜூலை 27 முதல் சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளன.
இதில் விஜய் டிவியில் வரவேற்பைப் பெற்றுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் ரசிகர்களை குஷிப்படுத்தும் வண்ணம் ஒரு மணி நேரம் சீரியலை ஒளிபரப்பினர். இந்த சீரியலில் முக்கிய பாத்திரமான சித்ரா மாஸ்க் அணிந்துள்ளார். ஜுரம் ஏற்பட்டதால் முன் ஜாக்கிரதையாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்.’ சீரியலிலும் கொரோனா விழிப்புணர்வுக் காட்சிகள் இடம்பெற்றிருப்பது வரவேற்கத் தக்கதாக உள்ளது என்கிறார்கள் ரசிகர்கள்.
**-வேந்தன்**�,