இனி காலை 6 மணிக்கு பள்ளிகள் தொடக்கம்!

public

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெப்ப காற்று வீசுவதால் மக்கள் கடுமையாகத் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக ஒடிசாவில் கடந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த வாரம் சனிக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாநில கல்வித் துறை உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த வாரம் மீண்டும் பள்ளிகள் திறப்பதாக அறிவிப்பு வெளியானது.
இது தொடர்பாக மாநில கல்வித் துறையின் முதன்மை செயலாளர் பிபி சேத்தி கூறுகையில், “ஒடிசாவில் காலை 8.30 மணியளவில் வெப்பநிலை 32 முதல் 34 டிகிரியை எட்டியுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் வழக்கமான நேரத்தில் பள்ளிக்கு வந்து செல்வது சிரமமாகியுள்ளது. எனவே, காலை 6 மணிக்கு பள்ளி வகுப்புகள் தொடங்கப்பட்டு, உணவை காலை 9 மணிக்கு வழங்கி, அத்துடன் பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் கல்வி கற்பதில் தடையில்லாமல், அவர்களின் மதிய உணவும் உறுதி செய்யப்படும். அத்துடன் பெரும்பாலான அரசு பள்ளிகள் மாணவர்களின் வீடுகளுக்கு நடந்து செல்லும் அருகாமையில் உள்ளதால் அவர்களுக்கு வெப்ப பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து ஒடிசாவில் மாணவர்கள் காலை ஆறு மணிக்கு முன்னதாகவே பள்ளிக்கு வருகை தந்தனர். ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 44 டிகிரிக்கும் மேல் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக டிடிலாகர் பகுதியில் 44.5 டிகிரியும், போலாங்கிர் மற்றும் பௌத் பகுதியில் 45 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது. மேலும், 21க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 40 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அடுத்த சில நாட்கள் ஒடிசாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.