Zஇனி ஸ்மார்ட்போனையும் மடிக்கலாம்!

Published On:

| By Balaji

டேபிளில் அவ்வளவு பெரிதாக இருந்த கம்ப்யூட்டரை, சின்னதாக மடக்கிவைப்பது மடிக்கணினி எனப்பட்டது. அப்படியே போகப்போக ஸ்மார்ட்போன் அளவுக்கு கம்ப்யூட்டர் சுருங்கியது. இப்போது ஸ்மார்ட்போன்கள் பெரிதாக வேண்டிய காலமும், கட்டாயமும் வந்துவிட்டது. இதைத்தான் வாழ்க்கை ஒரு வட்டம் என சொன்னார்களோ!

அவ்வளவு சீக்கிரத்தில் பெரிய ஸ்மார்ட்போன்களை மக்களிடம் கொண்டு சேர்த்துவிட முடியாது. காரணம், தினம் பயன்படுத்தும் பேக், பர்ஸ், பைக் என எல்லாவற்றிலும் ஸ்மார்ட்போன்கள் வைப்பதற்கான இடத்தை உருவாக்கிவிட்டார்கள். ஸ்மார்ட்போன்கள் பெரிதானால், எல்லாவற்றையுமே பெரிதாக்க வேண்டும். ஆனால், அதற்கு இப்போது வாய்ப்பில்லை. எனவே, ஸ்மார்ட்போன்களை பெரிதாக்கவும் வேண்டும்; அதேசமயம், அவற்றை கைப்பையில் எடுத்துக்கொண்டும் செல்ல வேண்டும் எனும்போது என்ன செய்யலாம் என்றுதான் எல்லா ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்களும் மண்டையை உடைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், சாம்சங் ஒரு புதிய ஐடியாவுடன் வந்தது. அது, Foldable Smartphone எனப்படும் மடக்கி வைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள்.

சாம்சங் இதை அறிவித்தபோது உலகமே சிரித்தது. ஆனால், 2019 ஜனவரியில் செய்து காட்டினார்கள். ஆனால், அதில் சில பிரச்சினைகள் இருந்தன. உடனே, பின்வாங்கிய சாம்சங் இப்போது பாய்ந்திருக்கிறது. வெற்றிகரமாக தங்களது ‘Samsung Galaxy Fold’ என்ற மடக்கும் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுவிட்டது.

சாதாரணமாக 4.6 இன்ச் அளவுள்ள இந்த ஸ்மார்ட்போன், முழுவதுமாக பிரிக்கும்போது 7.3 இன்ச் அளவுள்ள ஒரு டேப்லேட் மாடலில் மாறிவிடுகிறது. ‘எத்தனை முறை மடக்கிக்கொண்டே இருப்பது?’ என்ற கேள்வி எழுந்தபோது, “இரண்டு லட்சம் முறை நாங்கள் அதனை மடித்துப் பார்த்துவிட்டோம். எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று கூறியிருக்கிறது சாம்சங்.

மடித்து வைக்கப்பட்ட நிலையில் ஒரு கேமராவை மட்டும் பெற்றுள்ள Fold பிரிக்கப்பட்ட நிலையில் 6 கேமராக்களைக் கொண்ட பிக் பாஸாக மாறிவிடுகிறது. 12GB RAM கொண்டுள்ள இந்த Foldஇன் வேகம் அபரிமிதமாக இருப்பதாக முதலில் பயன்படுத்தியவர்கள் கூறியிருக்கின்றனர்.

இரண்டு விதங்களில் பயன்படுத்தக்கூடிய இந்த Fold, இரண்டு பேட்டரிகளைக் கொண்டுள்ளது. மொத்தமாக 4380mAh சார்ஜில் செயல்படக்கூடியது. இவ்வளவு சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கும் இதன் விலை 1,64,999. நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள். ஆம், ஒரு லட்சத்து அறுபத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ரூபாய் மட்டுமே.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share