Vரிலாக்ஸ் டைம்: சாமை சத்துருண்டை!

Published On:

| By Balaji

ரிலாக்ஸ் டைமில் நொறுக்கு தீனி உண்பது பழக்கமாக மாறிவிட்ட சமூகத்தில் அதை ஆரோக்கியமான முறைப்படி சாப்பிட்டால் உடல் எடையை குறைப்பதற்கும் இருக்கும் எடை அதிகரிக்காமல் பார்ப்பதற்கும் அது உதவி செய்யும். அதற்கு இந்த சாமை சத்துருண்டை பெஸ்ட் சாய்ஸ்.

**எப்படிச் செய்வது?**

ஒரு கப் சாமை அரிசியை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து ரவை போல பொடித்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அதில் அரை கப் வெல்லத்தைப் பொடித்துப் போட்டுக் கொதிக்கவிடவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த சாமை அரிசி ரவை, கால் கப் தேங்காய்த் துருவல், அரை டீஸ்பூன் ஏலக்காய்த்தூள், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்துகொண்டு, கொதிக்கவிட்ட வெல்லத் தண்ணீரை சேர்த்துக் கலந்துகொள்ளவும். இதைக் கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடித்துவைத்து, தேங்காய்த் துருவலால் அலங்கரித்துச் சாப்பிடவும்.

**சிறப்பு**

உடல் எடையைக் குறைக்கும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். எலும்புகளுக்கு இடையிலுள்ள தசைகளை வலுப்பெறச் செய்யும் தன்மை சாமைக்கு உண்டு. அனைத்து வயதினருக்கும் ஏற்றது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share