சேலத்தில் 26ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

Published On:

| By Balaji

சேலத்தில் வருகிற 26ஆம் தேதி 100 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார். பின்னர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர், தேர்தலுக்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று சொல்லி பெற்ற மனுக்கள் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தீர்வு காணப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஏழை, எளிய மக்களின் தேவையை கேட்டறிந்து அதனை உடனடியாக நிறைவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதில் தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலம் மாவட்ட மக்களின் மீது கலெக்டர் கார்மேகம் கூடுதல் அன்பு செலுத்தி வருகிறார். முதியோர் உதவித்தொகை கேட்பவர்கள், விதவை உதவித்தொகை, மகளிர் சுயஉதவிக்குழு கடன், பட்டா மாறுதல் எதுவாக இருந்தாலும் அலுவலர்களுடன் கலந்து பேசி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனுக்கள் பிரித்து அனுப்பப்படும்” என்று பேசியவர்,

“சேலத்தில் வருகிற 26ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 100 தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகள், ப்ளஸ் 2 முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் குறைவாக படித்திருந்தாலும், அதிகமாக படித்திருந்தாலும் அவர்களுக்கேற்ற வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்” என்றார்.

**-ராஜ்**

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share