கோவிட் தொற்று மற்றும் ஊரடங்கால் விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன. கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஒரு சில விமானங்கள் இயங்கி வந்த போதும் விமான நிறுவனங்கள் பெரிதாக நஷ்டத்தில் இயங்கின. மேலும், பல ஊழியர்களுக்கும் வேலை பறி போனது. சிலருக்கு பாதிக்கும் மேல் சம்பளம் குறைக்கப்பட்டது.
தற்போது பெரும்பாலான விமான நிறுவனங்களின் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு விமானங்கள் வழக்கமாக இயங்க தொடங்கியுள்ளன. இந்த நிலையில் சம்பளம் குறைக்கப்பட்ட ஊழியர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் இதற்கு முன்பு வாங்கியிருந்த ஊதியம் இனி வழங்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
“பெருந்தொற்று காலம் தற்போது முடிவடைந்த நிலையில், மீண்டும் விமானத் துறை முழு வேகத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. எனவே, குறைக்கப்பட்ட சம்பளம் மீண்டும் அதிகரிக்கப்படும். ஏப்ரல் 1, 2022 முதல் இது அமல்படுத்தப்படும்” என்று ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய டாடா குழுமம் அறிவித்துள்ளது. விமானிகளைப் பொறுத்தவரை, தற்போது 20 சதவிகிதம் ஃபிளையிங் அலவன்ஸ் வழங்கப்படுகிறது. 35% அளவிலான சம்பளக் குறைப்பு அப்படியே இருக்கும். ஸ்பெஷல் பே வழங்கப்படும் விமானிகளுக்கு மட்டும் அலவன்ஸ் 25% அளவுக்கு உயர்வு வழங்கப்படும்.
கேபின் குழு ஊழியர்களுக்கு ஃபிளையிங் அலவன்ஸ் 10% தற்போது சேர்த்து வழங்கப்படுகிறது. நிறுவனத்தின் பிற அதிகாரிகளுக்கு, கோவிட் காலத்துக்கு முன்பு 50% வரை சம்பளம் குறைக்கப்பட்டது. தற்போது 25% வரை சேர்த்து வழங்கப்படும், அதாவது மொத்த சம்பளத்தில் 75% சம்பளம் இனி கிடைக்கும். மற்ற ஊழியர்களுக்கு, முழு சம்பளமும் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
இவை மட்டுமின்றி, நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும், விமானிகள், கேபின் ஊழியர்கள் உட்பட, அனைவருக்கும் இணைக்கப்பட்ட ஸ்பெஷல் அலவன்ஸ் மற்றும் வேறு சில அலவன்ஸ்களும் ஏற்கனவே உள்ளபடி தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
ஏர் இந்தியா ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – டாடா குழுமம்!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel