Sஆதாரம் உள்ளது: மராட்டிய போலீஸ்!

public

மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக மகாராஷ்டிர போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பு உள்ளதாக சமூக செயற்பாட்டாளர்களான சுதா பரத்வாஜ், கவிஞர் வரவரா ராவ்,கௌதம் நவ்லகா, அருண் பெராரியா மற்றும் வெர்னான் கான்சால்வ்ஸ் ஆகியோர் கடந்த 28ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த கைது சம்பவத்திற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவர்களை வீட்டுக் காவலில் வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கும் மாவோயிஸ்ட் அமைப்பிற்கும் தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக மகாராஷ்டிர போலீசார் தெரிவித்துள்ளனர். மும்பையில் இன்று (ஆகஸ்ட் 31) செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு) பரம்பீர் சிங், “ சட்டப்பூர்வமாக நிறுவப்பட்ட இந்திய அரசாங்கத்தை ரஷ்யாவிலும் சீனாவிலும் வாங்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி தூக்கி எறிவதற்காக மவோயிஸ்ட் இயக்கங்கள் மூலம் பெரிய சதி திட்டம் நடந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், இந்த சதியில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களின் கூட்டம் பாரீஸ் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளில் நடந்துள்ளது. அங்கிருந்து நிதிகள் திரட்டப்பட்டுள்ளன. காஷ்மீர் மற்றும் மணிப்பூர் பிரிவினைவாதிகளிடமும் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் இருந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற நக்சஸ்(UrbanNaxal) என்ற பதம் புதியதல்ல, கடந்த 20 ஆண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *