sஸ்டெர்லைட்டை மூட முழு அதிகாரம்: தமிழக அரசு!

Published On:

| By Balaji

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (ஆகஸ்ட் 6) தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் நிறுவனத்துக்குச் சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையிலிருந்து வருகிறது. வேதாந்தா தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது தமிழக அரசு தன் வாதத்தை முன்வைத்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வில் நேற்று (ஆகஸ்ட் 6) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஸ்வநாதன், “மாசு ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் ஆலைகளை மூட தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அந்த வகையில் நீர் மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது நியாயமானது. ஆலையை இயக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தும் இயக்கியதால்தான் நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டது” என்று வாதிட்டார்.

மேலும், “தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் அதிகக் கழிவுகளை வெளியேற்றி வந்ததாலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஸ்டெர்லைட் ஆலையை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறுவது தவறு. அரசியல் சட்டப்பிரிவு 19, பிரிவு (1) மற்றும் அதன் உட்பிரிவுகள் தொழில் நடத்துவதற்கான உரிமையை வழங்குகிறது. ஆனால் இந்த அடிப்படை உரிமை என்பது தனிநபர்களுக்கானதே தவிர, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது அல்ல என வழக்கறிஞர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

அரசுத் தரப்பு வாதம் முடிவடையாததால், விசாரணை இன்றைக்கு (ஆகஸ்ட் 7) தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அரசியல் லாபத்துக்காக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[தீரன் மூலம் ராமதாஸ் போடும் திட்டம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/06/19)**

**[டிஜிட்டல் திண்ணை: நண்பர் சிலை திறக்க வருவாரா ஃபரூக் அப்துல்லா?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/06/81)**

**[காஷ்மீர் கட்சிகளின் பதவி வெறியும் ஒரு காரணம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/06/6)**

**[கோமாளி டிரெய்லர்: ரஜினி ரியாக்ஷன்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/06/21)**

**[கார்ப்பரேட்டுகள் கைக்குப் போகிறதா காஷ்மீர்? – தமிழகக் குரல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/06/20)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share