sரோஹித்துக்குப் பிடித்தமான வீரர் இவர்தான்!

Published On:

| By Balaji

�இந்தத் தலைமுறை வீரர்களுள் எந்த வீரரின் ஆட்டத்தைப் பார்ப்பது தனக்கு மிகவும் விருப்பமானது எனத் தெரிவித்துள்ளார் ரோஹித் ஷர்மா.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி குறித்த விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் இந்தத் தொடரிலிருந்து விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று (செப்.1) ‘ஆஸ்க்ரோ’ எனும் தலைப்பில் தனது ஃபாலோயர்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதில் கூறினார் ரோஹித். அதில் பல கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், இந்தத் தலைமுறை வீரர்களுள் யாருடைய ஆட்டத்தைப் பார்க்க உங்களுக்குப் பிடிக்கும் எனும் கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ரோஹித், “ஏபி டி வில்லியர்ஸ்தான்” எனப் பதிலளித்துள்ளார்.

அதையடுத்து, “அவரைத்தான் நீங்கள் குறிப்பிடுவீர்கள் என எதிர்பார்த்தேன். அதுபோலவே நீங்கள் குறிப்பிட்டுவிட்டீர்கள்” எனக் கூறியுள்ளார் அந்தக் கேள்வியைக் கேட்டவர். கிரிக்கெட் உலகில் 360 டிகிரி எனச் செல்லமாக அழைக்கப்படும் டி வில்லியர்ஸ் சமீபத்தில்தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share