ரிலீஸான இடங்களிலெல்லாம் நல்ல வசூல் பெற்றுவரும் ‘தெறி’ திரைப்படம் சம்பாதித்தது பணம் மட்டுமல்ல, 60 குழந்தைகளின் அன்பையும்தான். ராகவா லாரன்ஸின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் குழந்தைகள், தெறி திரைப்படத்தைப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ், விஜய்க்கு ஃபோன் செய்து விஷயத்தைத் தெரிவிக்க, ‘சரி நண்பா’ என்று சொல்லியிருக்கிறார் விஜய். டிக்கெட் வரும் படம் பார்க்கலாம் என, குழந்தைகளிடம் சொல்லி வைத்திருந்த லாரன்ஸுக்கு வந்திருக்கிறது அதிர்ச்சி அழைப்பு. ப்ரிவ்யூ ஷோ நடைபெறும் பிரசாத் ஸ்டூடியோவை வாடகைக்கு எடுத்து, ஒரு ஷோ 60 குழந்தைகளுக்கு மட்டும் திரையிட ஏற்பாடு செய்திருக்கிறார் விஜய். திடீர் சர்ப்ரைஸால் கிடைத்த மகிழ்ச்சியுடன் விஜய்க்கு நன்றி தெரிவித்து, ஃபேஸ்புக்கில் தனது நன்றியை பகிர்ந்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். எதிர்பாராத சமயத்தில், இதுபோன்று நல்ல விஷயங்களைச் செய்து நடிகர்களின் நண்பராகவும், குழந்தைகளின் நண்பனாகவும் நெருங்கிவிடுகிறார் விஜய்.�,
sராகவா லாரன்ஸுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
+1
+1
+1
+1
+1
+1
+1