Sரஜினிக்காக வருந்திய கமல்ஹாசன்

public

கோமாளி டிரெய்லரில் ரஜினிகாந்த் குறித்த விமர்சனத்தைக்கண்டு கமல்ஹாசன் வருத்தமடைந்ததாக முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து ஜெயம் ரவியின் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் கோமாளி. இதன் இரண்டாவது டிரெய்லர் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியானது. அதில் “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோவைப் போட்டுக்காட்டுகிறார் யோகி பாபு. அதைப்பார்த்து ஜெயம் ரவி பதற்றத்துடன் “ஏய், இது 96. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதாக அந்தக் காட்சி அமைந்துள்ளது.

ரஜினியின் அரசியல் வருகையைக் கலாய்க்கும் விதத்தில் எடுக்கப்பட்ட இந்தக் காட்சிக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் ‘நாளைய தமிழகம் ரஜினி’ என்ற ஹாஷ் டேக்கையும் இந்திய அளவில் டிரெண்டாக்கினர். இதுதொடர்பாக விளக்கமளித்த கோமாளி திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், “நான் பயங்கர ரஜினி ரசிகன். அவர் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் அந்தக் காட்சியை வைத்தேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கோமாளி டிரெய்லரை நேற்று (ஆகஸ்ட் 4) பார்த்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதில் ரஜினியின் அரசியல் வருகை கலாய்க்கப்பட்டதைக் கண்டு வருத்தமடைந்து தனது அதிருப்தியை திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷிடம் வெளிப்படுத்தியுள்ளார். இந்தத் தகவலை மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நம்மவர் அவர்கள் இன்று காலை கோமாளி டிரெய்லர் பார்த்தார். அதில் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றிய விமர்சனத்தைப் பார்த்தவர், உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாகப் பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார். நட்பின் வெளிப்பாடா? நியாயத்தின் குரலா?” என்று பதிவிட்டுள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[சேரனை மீட்க கிளம்பும் இயக்குநர்கள்: மன்னிப்பு கேட்ட சரவணன்](https://minnambalam.com/k/2019/08/04/19)**

**[பழிவாங்கிய ராமானுஜம், ராஜேந்திரன்: ஜாங்கிட்](https://minnambalam.com/k/2019/08/04/40)**

**[வெள்ளைக்கொடியுடன் வந்து பிணங்களை எடுத்துச்செல்லுங்கள்: இந்தியா!](https://minnambalam.com/k/2019/08/04/29)**

**[குடும்பங்களைக் குறிவைக்கும் சசிகுமார்](https://minnambalam.com/k/2019/08/04/10)**

**[தினகரனின் புது எச்சரிக்கை!](https://minnambalam.com/k/2019/08/04/43)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0