கண் இமைத்து இணையத்தில் விளம்பரமான நடிகை ப்ரியா வாரியர், தற்போது விளம்பரமாகவே மாறியுள்ளார்.
மலையாளப் படமான ஒரு அடார் லவ்வின் ஒரு பாடலில் சக மாணவரைப் பார்த்து கண் இமைக்கும்படியான ஒரு காட்சியில் நடித்திருந்தார் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர். இந்தக் காட்சி இணையத்தில் வெளியாகி முரட்டுத்தனமான ஹிட் ஆனது. டப்ஷ்மாஸ்களில் பலபேர் கண்ணடிக்க ஆரம்பித்தார்கள். டீக்கடையில் உட்கார்ந்திருக்கும் ராகுல் தாத்தாக்கள் முதல் நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கும் ராகுல் காந்திவரை என யார் கண் இமைத்தாலும் அது ப்ரியாவை போலவே இருப்பதாகக் கூறி மீம்ஸ் போட்டுத் தள்ளினர் நெட்டிசன்ஸ்.
ஓவர் நைட்டில் டாக் ஆஃப் தி டவுன் ஆனதன் விளைவு, பல்வேறு விழாக்களுக்கு சிறப்பு அழைப்பாளராக ப்ரியாவைக் கொண்டுபோய் நிறுத்தியது. இன்ன பிற பட வாய்ப்புகளையும் பெற்றுந்தந்தது.
கொஞ்ச நாட்களாக இல்லாமல் இருந்த இந்த ப்ரியா வாரியர் அலை தற்போது மீண்டும் அடிக்கத் தொடங்கியுள்ளது. இம்முறை இதனைத் தொடங்கியிருப்பது ப்ரியா வாரியர் அல்ல; திஷா பதானி. யெஸ்..! ‘எம்.எஸ் தோனி அண்டோல்டு ஸ்டோரி’ எனும் படத்தில் நடித்தாரே அதே திஷா பதானிதான்.
படங்களில் பிஸியாக வலம்வரும் திஷா சமீபத்தில் நெஸ்கஃபே கோல்டு காபி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். பல மீம்ஸ்களின் பின்னணியில் வலம்வரும் அந்த விளம்பரத்தில் பிரியாவாகவே மாறி கண் இமைத்துள்ளார் திஷா. அது மட்டுமல்லாமல் பாப்புலரான தக் லைஃப் மீம்ஸ், பிக் கயி கார்மிண்ட் மீம் மற்றும் ஆவோ கபி ஹவேலி பே மீம் போன்றவையும் இடம்பிடித்துள்ளன.
இந்த விளம்பரம் தற்போது இணையத்தில் கவனம்பெற்றுவருகிறது.
�,”