sபொன்னியின் செல்வன்: ஒப்புக்கொண்ட ஐஸ்வர்யா

Published On:

| By Balaji

மணிரத்னம் படத்தில் தற்போது தான் பணியாற்றுவதாகக் கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராய்.

மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படமாக இயக்குகிறார் என்று செய்திகள் வெளியாகிவரும் போதும் அவர் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. படத்திற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டும்போதே படம் பற்றிய தகவல்களை அதிகாரபூர்வமாக வெளியிடுவது மணிரத்னத்தின் ஸ்டைல்.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், கீர்த்தி சுரேஷ் குந்தவையாகவும், ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாகவும் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது முதன்முறையாக ஐஸ்வர்யா ராய் தான் இந்தப் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அவரிடம் இப்படம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “மணிரத்னம் இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில், இந்த செய்தி வெளியில் கசிந்துவிட்டது. அவர் படத்தில் நான் வேலை செய்வது உண்மை தான். என் குருவுடன் வேலை செய்வதில் எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி தான். நான் உற்சாகமாக, ஆர்வமாக, மகிழ்ச்சியுடன் பணியாற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!](https://minnambalam.com/k/2019/05/24/93)

**

.

**

[ஓ.பன்னீரின் ‘பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/25/30)

**

.

**

[தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!](https://minnambalam.com/k/2019/05/25/20)

**

.

**

[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)

**

.

.

**

[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share