sபடப்பிடிப்புக்காக நடத்தப்பட்ட கபடி தொடர்!

Published On:

| By Balaji

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் கென்னடி கிளப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

பெண்கள் கபடி போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் பாரதிராஜா, சசிகுமார் இணைந்து நடித்துள்ளனர். கபடி வீராங்கனைகளும் படக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கபடித் தொடரின் இறுதிப் போட்டி படமாக்கப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பிற்காக படக்குழு ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள 16 அணிகளுக்கு அழைப்பு விடுத்தது.

இந்த அணிகள் மோதிய ஆட்டங்கள் விழுப்புரத்தில் உள்ள உள் விளையாட்டரங்கில் பத்து நாள்களுக்கும் மேலாக 7 கேமராக்கள் கொண்டு படமாக்கப்பட்டுள்ளன. இந்த தொடரில் படக்குழுவைச் சேர்ந்த நடிகைகளும் கலந்துகொண்டனர். படத்திற்காக அல்லாமல் ஒரு போட்டியை எவ்வாறு படம்பிடிப்பார்களோ அதே போல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஆட்டம் நிறைவடைந்ததும் படக்குழு தங்களுக்கு தேவையான குளோஸ் அப் ஷாட்டுகளை எடுத்துள்ளது.

கிளைமாக்ஸ் காட்சி நிறைவடைந்துள்ள நிலையில் பாடல்களுக்கான படப்பிடிப்பு இனி நடைபெறவுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share