இணையப் பயன்பாட்டை விரிவாக்கம் செய்யும் இலக்கில் நைஜீரியாவுக்கு உதவ 100 மில்லியன் டாலர் கடன் வழங்க இந்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
நைஜீரியாவில் இணைய இணைப்பை நாடு முழுவதும் விரிவுபடுத்த அந்நாடு இலக்கு நிர்ணயித்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கான நிதியுதவிக்கு இந்திய அரசை நைஜீரியா நாடியுள்ளது. ஜனவரி மாதம் இதுதொடர்பாக நைஜீரிய அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் 100 மில்லியன் டாலர் கடன் வழங்க இந்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இக்கடனை இந்தியாவின் எக்ஸிம் வங்கி வழங்கவுள்ளது. நைஜீரியாவின் தகவல் தொடர்புத் துறை அமைச்சரான அல்ஹாஜி அடிபயோ, 2021ஆம் ஆண்டுக்குள் நாட்டின் 70 சதவிகித இடங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து *தி கார்டியன்* செய்தி நிறுவனத்திடம் அவர் பேசுகையில், “இந்தியாவுடனான கடன் ஒப்பந்தம் கைகூடிய பின்னர், முதற்கட்டமாக 1,000 சோலார் மொபைல் போன் டவர்கள் ஒரே ஆண்டுக்குள் அமைக்கப்படும். கிராமப்புற மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் தொலைத் தொடர்புச் சேவைகளை வழங்குவதே அரசின் நோக்கமாகும். குறுகிய காலத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றி முடிக்க இந்திய உயர் ஆணையத்துடன் நைஜீரிய தகவல் தொடர்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் 70 சதவிகித இடங்களில் பிராட்பேண்ட் இணைப்புகளை விரிவுபடுத்திவிடலாம் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களால் தற்போது பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கு அதிகம் செலவாவதாகவும், சோலார் உபகரணங்கள் மூலமாக மின்சாரச் செலவுகளைக் குறைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
�,”