இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் அமீர் அணியின் இரண்டு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
நடிகர்கள் சங்கத் தேர்தலைத் தொடர்ந்து தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலும் தமிழ்த் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பாரதிராஜா தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, தற்போது தலைவர் பதவிக்கான போட்டி அதிகரித்துள்ளது. இயக்குநர்கள் பி.வாசு, அமீர், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்துள்ளனர். கடும் போட்டி நிலவுவதால் இயக்குநர்கள் சங்கமும் தமிழ்த் திரையுலகில் விவாதப்பொருளாகியுள்ளது.
இந்த நிலையில், தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி அணி மற்றும் அமீர் அணி போட்டியிட்ட நிலையில் அமீர் அணியின் இரண்டு விண்ணப்பங்களும் நேற்று (ஜூலை 11) நிராகரிக்கப்பட்டுள்ளன. இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கான அமீரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதே போல், அமீர் அணியின் சார்பிலே இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் தாக்கல் செய்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.
அதற்கான காரணங்கள் என்னவென சரிவரத் தெரியாத நிலையில், இந்தச் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமீர் தலைமையிலான அணி போட்டியிடுமா… நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்துக்குப் பதிலாக வேறு யாரெனும் போட்டியிடுவார்களா என இன்று தெரியவரும்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!](https://minnambalam.com/k/2019/07/11/76)**
**[வைகோவுக்கு இன்னொரு செக்!](https://minnambalam.com/k/2019/07/10/78)**
**[இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!](https://minnambalam.com/k/2019/07/11/22)**
**[மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/07/11/21)**
**[இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!](https://minnambalam.com/k/2019/07/11/48)**
�,”