இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக திருவாரூர் சென்ற உதயநிதிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 4ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார். தான் பொறுப்பேற்ற பிறகு முதல் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தைக் கடந்த 6ஆம் தேதி நடத்திய முடித்த உதயநிதி, விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அடுத்தடுத்து இரு மாவட்ட அமைப்பாளர்களையும் மாற்றி அதிரடி காட்டியிருந்தார்.
இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நேற்று (ஜூலை 13) திருவாரூர் சென்றார் உதயநிதி. முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘இளைஞரணிச் செயலாளர் உதயநிதி’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகையை மகேஷ் அவருக்குப் பரிசாக வழங்கினார். பின்னர் கார் மூலம் திருவாரூர் சென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு, இளைஞரணி நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து கலைஞர் பிறந்த இல்லத்துக்குச் சென்ற உதயநிதி, கலைஞர், அவர் தாயார் அஞ்சுகத்தம்மாள் ஆகியோரின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த வருகைப் பதிவேட்டில், “கழகத்தின் இளைஞரணிச் செயலாளர் என்ற பொறுப்பை ஏற்ற பின்னர் முதன்முறையாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த இல்லம் வந்துள்ளது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம்” என்று எழுதியுள்ளார். மேலும், தமிழ் – திராவிடம் – சமூகநீதி – சுயமரியாதை வாழ்க என்றும், பெரியார் – அண்ணா – கலைஞர் – தலைவர் புகழ் வெல்க என்ற முழக்கத்தையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து காட்டூரில் உள்ள அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். அப்போது துர்கா ஸ்டாலின், அன்பில் மகேஷ், பூண்டி கலைச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
**
மேலும் படிக்க
**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
�,”