தருமபுரி மாவட்டத்தில் மணமகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து மணமகன் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் குமார், பெங்களூருவில் சிப்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பவரது மகள் சரண்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று (ஜூன் 7) காலை பென்னாகரத்தில் உள்ள மாரியப்பன் வீட்டில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
நேற்று இரவு குமாருக்கும் சரண்யாவுக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, வேறொரு அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டார் குமார். அவரைச் சமாதானம் செய்யும் நோக்கில் உறவினர்கள் கதவைத் தட்டினர். அவர் திறக்காததால் ஜன்னல் வழியாகப் பார்த்தனர். அப்போது, குமார் தூக்கிலிட்டுக் கொண்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைக் கேட்டு சரண்யா கதறி அழுதார்.
இதையடுத்து, உடனடியாக பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குமாரின் சடலத்தை மீட்ட போலீசார், அதனை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் முடிந்த அன்றே குமார் இறந்ததைக் கேள்விப்பட்டதும், அப்பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சரண்யாவுக்கும் குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இது பற்றி தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
**
மேலும் படிக்க
**
**
[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)
**
**
[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)
**
**
[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)
**
**
[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)
**
**
[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)
**
�,”