குறைவான விளைச்சல் காரணமாக திருச்சி சில்லறை விற்பனைச் சந்தைகளில் மாம்பழம் விலை உயர்ந்துள்ளது.
ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்தே திண்டுக்கல், நத்தம், சேலம், தர்மபுரி, ஒசூர், துவரக்குறிச்சி ஆகிய பகுதிகளிலிருந்து திருச்சிக்கு மாம்பழங்களின் வரத்து குறைந்துள்ளது. ஸ்ரீரங்கம் பகுதியில் விளைந்த மாம்பழங்களை வியாபாரிகள் சிலர் மாம்பழச்சாலையில் விற்பனை செய்கின்றனர். மற்ற பகுதிகளிலிருந்து வரும் மாம்பழங்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டில் மாம்பழங்களின் விலை ரூ.40 வரையில் உயர்ந்துள்ளதாக மாம்பழ வியாபாரிகள் கூறுகின்றனர். சில மாம்பழ ரகங்களின் விலை ரூ.50 வரையில் உயர்ந்துள்ளது.
சென்ற ஆண்டின் அக்டோபர், நவம்பர் மாதங்களில் குறைவான மழைப்பொழிவு இருந்ததால்தான் மாம்பழ விளைச்சல் குறைந்துவிட்டதாக *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்கும் பருவத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் விளைச்சல் 70 சதவிகிதம் குறைந்துவிட்டது. கஜா புயல் பாதிப்பும் உற்பத்தி சரிவுக்குக் காரணமாகும்.
திருச்சி சந்தைகளுக்கு கடந்த பல ஆண்டுகளாகவே திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியிலிருந்து மாம்பழங்கள் வருகின்றன. நத்தம் பகுதியைச் சேர்ந்த மாம்பழ விவசாயியான எஸ்.முருகேசன் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் பேசுகையில், “மாம்பழ விளைச்சல் குறைவாகவே இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ஆனாலும் மாம்பழங்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை” என்று கவலை தெரிவித்துள்ளார்.
விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கிச் செல்லும் வியாபாரிகள் அவற்றை அதிக விலைக்கு சந்தைகளில் விற்பனை செய்வதாகவும் அவர் கூறுகிறார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[இன அழிப்புப் போரில் இறந்தோருக்கு அஞ்சலி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/24)
**
.
.
�,”