Sதிமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!

Published On:

| By Balaji

கன்னியாகுமரி மாவட்ட தேமுதிக செயலாளர் ஜெகநாதன் ஸ்டாலினை இன்று சந்தித்து திமுகவில் இணைந்தார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக வடசென்னை, திருச்சி, விருதுநகர், கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்தித்தது. முன்னதாக கூட்டணி தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்கவே மாவட்டச் செயலாளர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள். ஆனால், அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவை எடுத்தது தேமுதிக தலைமை.

தொடர்ந்து மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பேட்டியளித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக-பாஜகவுடனான கூட்டணி தொடரும் எனத் தெரிவித்திருந்தார். இதனால் அதிருப்தியடைந்த கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக செயலாளர் சந்திரன், தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூலை 14) திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த கன்னியாகுமரி மாவட்ட தேமுதிக செயலாளர் ஜெகநாதன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். அப்போது திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

இதுதொடர்பாக திமுகவின் ட்விட்டர் பக்கத்தில், “கழகத் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் கன்னியாகுமரி மாவட்ட தேமுதிக செயலாளர் திரு. டி.ஜெகநாதன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுக-வில் இணைந்தனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக நிர்வாகிகளும் தொடர்ந்து மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருவது அக்கட்சியின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share