sதமிழகத்தில் இரோம் ஷர்மிளாவுக்கு கல்யாணம்!

Published On:

| By Balaji

A

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உருவாக்கப்பட்டது ‘ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்’. இந்த சிறப்பு சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி தன்னார்வலர் இரோம் ஷர்மிளா, கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டத்தை, அம்மாநிலத்தில் நடத்தி வந்தார். இது நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த சில மாதங்கள் முன்னர், தன்னுடைய போராட்டத்துக்கு ‘வேறுவடிவம் வேண்டும்’ என நினைத்து, போராட்டத்தை முடித்துக் கொண்டார், இரோம் ஷர்மிளா. அதன்பின்னர், மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் ‘மக்கள் எழுச்சி நீதிக்கூட்டணி’ என்ற கட்சியை உருவாக்கி, அதன் சார்பில் போட்டியிட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 90 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

பின்னர் சில நாட்கள் தென்னிந்தியாவின் பல பகுதிகளில், சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இரோம் ஷர்மிளா, ‘இனி ஒரு சமூகபோராளியாக மட்டுமே தான் இருக்க விரும்புவதாக’ அறிவித்தார்.

இந்நிலையில் ஷர்மிளா, வரும் ஜூலை மாதத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலரான, கேரளாவைப் பூர்விகமாக கொண்ட ‘டெஸ்மாண்டை’ தமிழ்நாட்டில் வைத்து திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel