sதடைகளைக் கடந்து ஃபார்முக்கு வந்த ஸ்டெய்ன்

Published On:

| By Balaji

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்திய தென் ஆப்ரிக்காவின் டேல் ஸ்டெய்ன், அந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய தென்ஆப்ரிக்க வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

தொடர் காயத்தின் காரணமாக கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த டேல் ஸ்டெய்ன் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் அவரது பழைய ஃபார்முக்குத் திரும்பினார். 35 வயதான அவர் இந்தத் தொடரில் [3 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை](https://twitter.com/cricketcomau/status/1062115516305666048) வீழ்த்தியிருந்தார். காயத்தில் இருந்த போது, தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்று பலமுறை நினைத்ததாக ஸ்டெய்ன், ஸ்போர்ட்ஸ் 24 ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் 24 ஊடகத்திற்கு ஸ்டெய்ன் அளித்த பேட்டியில், கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை நான் மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லாமல் இருந்தது. உடைந்த தோள்பட்டை மீண்டும் சீராக பல நாட்கள் ஆனது. அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் என் கையைச் சுழற்ற சரியாக 6 மாதங்கள் ஆனது. அப்போது கூட என்னால் பழைய வேகத்தை எடுக்க முடியவில்லை.

ஆனால் ஒருமுறை நான் விளையாடத் தொடங்கிவிட்டால் பின்னர் பந்துவீசுவது பைக் ஓட்டுவதைப் போல எளிதாகிவிடும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. தொடர் முயற்சிகளுக்குப் பிறகு மீண்டும் பழைய வேகத்துக்கு வந்ததை நினைத்து நான் ஆசிர்வதிக்கப்பட்டதைப் போல உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஸ்டெய்ன், “உலகக் கோப்பைக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. இருப்பினும் உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடிப்பதே எனது அடுத்த இலக்கு” என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டெய்ன் இதுவரை 121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 4.87 எகானமியுடன் 192 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share