பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் கடந்த வருடம் வெளியான தங்கல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இந்தத் திரைப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனையையும் படைத்தது. தற்போது இந்தப் படம், ஆகஸ்ட் 24 அன்று ஹாங்காங்கில் வெளியிடப்பட்டது. படம் வெளியான முதல் வாரத்தில் இதுவரையில் அங்கு வெளியான இந்தியப் படங்களை விடவும் அதிகம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
படம் வெளியான முதல் நாள் அன்று $85,000, வெள்ளிக்கிழமை அன்று $109,000 மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் $215,000 வசூலாகியுள்ளது. தங்கல் படம் வெளியாகி ஒன்பது மாதங்களைக் கடந்தபோதும் இன்னும் படத்துக்கான வரவேற்பு குறையவில்லை என்பது இந்த வசூல் மூலம் தெரிகிறது. முதல் வார இறுதியில் இதுவரையில் $702,000 வசூலாகியுள்ளது என்று நியூஸ்18 செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி இந்தியாவின் துணைத்தலைவர் அம்ரிதா பாண்டே கூறியுள்ளதாவது: **இந்தியாவில் வெளியாகி ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, இன்றும் எங்கு வெளியிட்டாலும் பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கிறது. கடந்த வாரம் ஹாங்காங்கில் வெளியான நேரடிப் படங்களை விடவும் தங்கல் படம் அதிகம் வசூல் செய்துள்ளது. நல்ல திரைக்கதை அம்சம்கொண்ட படங்களை எப்போதும் ரசிகர்கள் வரவேற்கிறார்கள் என்பது இதன் மூலமாகத் தெரிகிறது.**
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் [சீனாவின் 6,000 ஸ்க்ரீன்களில் பாகுபலி திரைப்படத்தை ரிலீஸ் செய்து](https://minnambalam.com/k/2017/06/10/1497078496) ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் செய்ததோடு அந்நாட்டு அரசியல் தலைவர்களின் பாராட்டையும் பெற்றது. அந்தப் படம் உலகளவில் இதுவரையில் $295.08 மில்லியன் (இந்தியா உட்பட) வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
�,