ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
ஐஐடி,என்ஐடி, ஐஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பி.இ., பி.டெக்., போன்ற இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ நடத்தும் ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேஷன் (ஜேஇஇ) பிரதான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அதன்படி, ஐஐடி-யில் இன்ஜினியரிங் படிக்க இரண்டு கட்ட நுழைவுத் தேர்வும் என்ஐடி, ஐஐஐடி, தஞ்சையிலுள்ள ஐஐசிபிடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிக்க, ஒரு கட்ட நுழைவுத் தேர்வும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
இதில், முதற்கட்ட ஜேஇஇ நுழைவுத் தேர்வு ஏப்ரல் 2, 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப பதிவு டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. இன்று இரவு 11:59 மணியுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது. தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான
அவகாசம் நாளை இரவு 11:59 மணியுடன் முடிகிறது.
பெரும்பாலான மாநிலங்களில், மாணவர்கள் உரிய நேரத்தில் விண்ணப்பிக்காததால் விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. எனவே, இனி விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படாது என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,