நாளை சந்திர கிரகணம் ஏற்படுவதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 11 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது. இந்தக் கிரகணமானது நாளை(ஜூலை 27)இரவு 11.54 மணிக்கு தொடங்கி 28 ஆம் தேதி அதிகாலை 3.49 மணி வரை நிகழ்கிறது.
திருப்பதி கோயிலில் ஒவ்வொரு நாளும் காலை முதல் பல உற்சவ சேவைகள் நடைபெறும். மேலும், பௌர்ணமி அன்று கருட சேவை நடைபெறும். ஆனால்,நாளை பௌர்ணமி அன்று இரவு 11.54 மணியில் இருந்து 28 ஆம் தேதி அதிகாலை 3.49 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.
இதனால், நாளை மாலை 5 மணி முதல் 28 ஆம் தேதி காலை 4.15 மணி வரை திருப்பதி கோயில் நடை அடைக்கப்படவுள்ளது. 28 ஆம் தேதி அதிகாலை 4.15மணிக்கு நடை திறக்கப்படும். அதன்பிறகு, கோயிலுக்குச் சுத்திகரிப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து, 7 மணி முதல் பக்தர்கள் இலவச சேவைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பௌர்ணமி அன்று நடைபெறக் கூடிய கருட சேவையும் ரத்து செய்யப்படுகிறது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
�,