sசண்டக்கோழி 2: வெளியான கீர்த்தியின் ரகசியம்!

public

O

விஷால் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சண்டக்கோழி-2 படத்திலிருந்து சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து முடித்துவிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது விஷாலுடனும் இணைந்து சண்டக்கோழி -2 படத்தில் நடித்துவருகிறார். இப்படம் அவரது பிறந்தநாளுக்கு மறுநாள் அதாவது அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் கதாபாத்திரங்களை வெளியிடும் ட்ரெண்ட் கோலிவுட்டில் தற்போது உள்ளது. முன்னதாக செக்கச்சிவந்த வானம், வட சென்னை போன்ற படங்களின் கதாபாத்திரங்களும் முன்கூட்டியே வெளியிடப்பட்டன. இந்நிலையில் சண்டக்கோழி- 2வில் நடித்துள்ள வரலட்சுமியின் கதாபாத்திரம் சமீபத்தில் வெளியானது.

அவர் இதில் பேச்சி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்தவகையில் தற்போது கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரப் பெயரும் வெளியாகியுள்ளது. கீர்த்தி இதில் செம்பருத்தி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் ஹேமா எனும் கதாபாத்திரத்தில் மீரா ஜாஸ்மின் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *