சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் நா நா படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை சித்ரா சுக்லா இணைந்துள்ளார்.
தெலுங்கில் ரங்குலா ராட்னம், மா அபாய் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சித்ரா சுக்லா. தற்போது இவர் நா நா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தை என்.வி.நிர்மல் குமார் இயக்குகிறார்.
“சித்ரா, சசிகுமாரின் காதலியாக வலம் வருகிறார். அவருக்கு நடனக் கலைஞர் கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது” என்று நிர்மல் தெரிவித்துள்ளார். தற்போது சித்ரா ஹைதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
ஏற்கெனவே இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் 18 நாட்கள் நடைபெற்றது. “கதை சென்னையில் தொடங்கி மும்பைக்கு நகர்கிறது. 45 நிமிடக் காட்சிகள் மும்பையில் நடைபெறும். இரண்டாம் பாதி சென்னையில் நடைபெறும். பிளாஷ்பேக் காட்சிகள் தேனியில் நடைபெறுகின்றன” என்று நிர்மல் தெரிவித்துள்ளார். படக்குழு தற்போது 50 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது.
டைட்டிலுக்கான காரணம் குறித்து கூறியுள்ள நிர்மல், “சசிகுமார் கதாபாத்திரத்தின் பெயர் நா.நாராயணன். அவரை மற்ற கதாபாத்திரங்கள் நா நா என்றே அழைக்கும். அதனால் அதையே டைட்டிலாக வைத்துவிட்டோம். சரத் குமார் மும்பையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்தைப் பற்றி கூறினால் கதையின் சுவாரஸ்யத்தை வெளியிடுவதாகிவிடும்” என்று மறுத்துள்ளார்.
என்.வி.நிர்மல் குமார் ஏற்கெனவே விஜய் ஆண்டனியை கதாநாயகனாகக் கொண்டு சலீம் படத்தை இயக்கினார். அரவிந்த் சாமி, த்ரிஷா நடித்துள்ள சதுரங்கவேட்டை 2 படத்தை இயக்கியுள்ளார். சில காரணங்களால் அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.
**
மேலும் படிக்க
**
**[சசிகலாவின் அருமை இப்போது புரிகிறதா? -அமமுகவின் வீடியோ](https://minnambalam.com/k/2019/07/24/49)**
**[ரூ.200 கோடி சொத்து: முன்னாள் மேயர் கொலைப் பின்னணி!](https://minnambalam.com/k/2019/07/24/68)**
**[மா.சுப்பிரமணியனுக்கு அரசு வீசும் வலை!](https://minnambalam.com/k/2019/07/24/43)**
**[ டிஜிட்டல் திண்ணை: விஸ்வரூப வேலுமணி- அலர்ட் ஆகும் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/24/77)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”