sகேரளாவில் தொற்றுநோய்கள் இல்லை: ஜே.பி. நட்டா

Published On:

| By Balaji

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் தொற்றுநோய்கள் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத பெருமழை பெய்துள்ளதால், அணைகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக, மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தால் கேரளாவில் இதுவரை 373 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கேரளாவில் தற்போது வெள்ளம் வடிந்து மக்கள் தங்களுடைய வீடுகளுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். நிறைய இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. அந்தப் பகுதிகளில் தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், கேரளாவின் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உயர்மட்ட கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கேரளாவின் நிலமையைத் தனிப்பட்ட முறையில் தானே கவனித்து வருவதாகவும், இதுவரை கேரளாவில் தொற்றுநோய்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார். மேலும் கேரள சுகாதாரத் துறை அமைச்சரிடம் தொடர்ந்து பேசி நிலவரத்தைக் கேட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அமைச்சர், அவசரக்கால மருந்து பொருட்கள் 65 மெட்ரிக் டன் மற்றும் 1 கோடி குளோரின் மருந்துகள், 20 மெட்ரிக் டன் பிளிச்சிங் பவுடர்கள் உள்ளிட்டவை கேரளாவிற்கு மத்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதேபோல 12 மாவட்டங்களுக்கு என கூடுதலாக 12 மருத்துவக் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகா மாநிலத்தின் குடகு மாவட்டத்திற்கும் மருத்துவக் குழுவை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது” என்று தெரிவித்தார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share