நடிகை கீர்த்தி சுரேஷ் தன் குடும்பத்தோடு ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழின் முன்னணி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமில்லாது பிற மொழிப்படங்களிலும்கூட கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியாக நடித்துவருகிறார். தற்போது தமிழில் விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் `சர்க்கார்’ , விஷால் – லிங்குசாமி கூட்டணியில் உருவாகும் ‘சண்டக்கோழி 2’ மற்றும் ஹரி-விக்ரம் கூட்டணியில் உருவாகும் ‘சாமி ஸ்கொயர்’ ஆகிய படங்களின் வெளியீட்டுக்குக் காத்திருக்கிறார்.
சமீபத்தில் நடிகை சாவித்திரியின் பயோ பிக் படத்தில் இவர் நடித்திருந்தார். வழக்கமான நடிகையாக மட்டுமே அதுவரை அவரைப் பார்த்திருந்த சில இயக்குநர்கள், அந்தப் படத்திற்குப் பின்னர், இதுபோல வெரைட்டியான மற்றும் வெயிட்டான ரோல்களுக்குக்கூட கீர்த்தியை அணுகலாமோ என்றுகூட யோசித்துவருகின்றனர். அந்தளவிற்கு கீர்த்திக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது அந்தப்படம்.
இந்நிலையில் பெங்களூருவில் ஏவிஆர் என்ற நகைக் கடை திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அக்கா திரைப்படம் இயக்க அதை அப்பா தயாரிக்க வேண்டும். அதில் பாட்டி, அம்மாவுடன் தானும் சேர்ந்து நடிக்க வேண்டும்” என்று தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார் கீர்த்தி.
கீர்த்தியின் தந்தை சுரேஷ் தயாரிப்பாளர். தாய் மேனகா ரஜினியுடன் ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்தவர். பாட்டி ‘தாதா 87’,‘கடைக்குட்டி’ சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷின் ஆசை நிறைவேற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தி உள்ளனர்.�,