sகிச்சன் கீர்த்தனா: பச்சைப்பயற்றுப் பாயசம்

Published On:

| By Balaji

தமிழர் விருந்துகளில் முக்கிய உணவு பாயசம். இதில் பால் பாயசம், ஜவ்வரிசி பாயசம், அவல் பாயசம் எனப் பல வகை உண்டு. விருந்துகளில் நிறைவு உணவாகப் பரிமாறுவதற்கும், எளிதில் செரிமானமடையும் உணவாக அளிப்பதற்கும், மென்றுவிழுங்குவதில் சிரமமுள்ளவர்களுக்கும் உணவாக பாயசம் பயன்படுகிறது. இந்தப் பச்சைப்பயற்றுப் பாயசம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை எதிர்க்கும் ஆற்றல்கொண்டதுடன் குறைந்த ரத்த அழுத்தத்தைச் சீராக்கவும், எடையைச் சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.

**என்ன தேவை?**

பச்சைப்பயறு – 200 கிராம்

வெல்லம் – 150 – 200 கிராம்

தேங்காய்ப்பால் – ஒரு கப்

முந்திரி – 8 – 10

உலர்திராட்சை – ஒரு கைப்பிடி அளவு

ஏலக்காய் – 4 (பொடிக்கவும்)

தேங்காய்த் துருவல் – அரை கப்

நெய் – தேவையான அளவு.

**எப்படிச் செய்வது?**

பச்சைப்பயற்றைச் சிறிதளவு நெய்யில் வாசனை வரும் வரை வறுத்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவும். வெல்லத்தை நன்றாகப் பொடித்து வேகவைத்த பயற்றில் சேர்த்து தேங்காய்ப்பாலையும் ஊற்றி நன்கு கொதிக்கவைக்கவும்.

கடாயில் நெய்யைக் காயவைத்து முந்திரி, திராட்சையை வறுத்து பாயசத்தில் நெய்யுடன் ஊற்றவும். ஏலக்காய்த்தூள் மற்றும் தேங்காய்த் துருவலை சிறிதளவு நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்த்துப் பரிமாறவும்.

[நேற்றைய ரெசிப்பி: பச்சைப்பயறு சீஸ் பால்ஸ்](https://minnambalam.com/k/2020/01/30/88)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share